அதிபர் இருக்கையை நெருங்கிவிட்டார் ஜோபைடன்: பரபரப்பு தகவல்

 

அமெரிக்க அதிபர் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. ஜோபைடனுக்கும் டிரம்புக்கும் இடையே சிறு வித்தியாசம் மட்டுமே இருந்ததால் அதிபர் தேர்தல் முடிவுகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இந்த நிலையில் ஜார்ஜியா மற்றும் அரிசோனா ஆகிய மாகாணஞ்களில் ஜோபைடன் வெற்றிபெற்றால் அவர் அதிபராக முடியும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்த இரண்டு மாகாணங்களிலும் ஜோபைடன் வெற்றி பெற்றால், டிரம்ப் முன்னிலையில் உள்ள பென்சில்வேனியா மற்றும் மிச்சிகன் அல்லது விஸ்கான்சின் ஆகிய மாகாணங்களில் ஜோபைடன் தோற்றாலும் மெஜாரிட்டிக்கு தேவையான 270 வாக்குகளை பெற முடியும் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் ஜோபைடன் அமெரிக்க அதிபர் நாற்காலியை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிப்பதற்குள் முன்கூட்டிய வெற்றி பெற்றதாக அதிபர் டிரம்ப் கூறியதால் திடீரென கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதாகவும், தேர்தலில் வெற்றி பெற்றதாக டிரம்ப் கூறியதால் கச்சா எண்ணெய் விலை சுமார் 3 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்னும் பல லட்சம் வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில் இறுதி முடிவு நாளை காலை தான் தெரியும் என கூறப்படுகிறது

From around the web