கொள்ளையடிக்க வந்தவர்களுக்கு சானிடைசர் கொடுத்த நகைக்கடைக்காரர்: வைரலாகும் வீடியோ

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்களுக்கு நகைக்கடைக்காரர் தெரியாமல் சானிடைசர் கொடுத்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையடிக்க வந்த கொள்ளையர்களுக்கு நகைக்கடைக்காரர் தெரியாமல் சானிடைசர் கொடுத்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது 

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அலிகார் என்ற பகுதியில் நீண்ட நாட்களாக நகை கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த கடையில் வாடிக்கையாளர்கள் விறுவிறுப்பாக நகைகளை பார்த்துக் கொண்டிருக்கும் போது மூன்று இளைஞர்கள் வந்தனர். அவர்களுக்கு நகைக்கடைக்காரர் சானிடைசர் கொடுத்து கைகளை சுத்தம் செய்ய சொன்னார் 

கைகளைக் கழுவியவுடன் அந்த இளைஞர்கள் திடீரென துப்பாக்கியை எடுத்து கடைக்காரர்களை மிரட்டி கடையில் இருந்த நகை பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்த சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

From around the web