நாடு முழுவதும் இன்று நடத்தப்படுகிறது ஜே.இ.இ., தேர்வுகள்: மாணவர்கள் ஆர்வம்

இந்தியாவில் உள்ள 7 ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக நடத்தப்படும் நுழைவுத்தேர்வு தான் ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு. இந்த தேர்வு செப்டம்பர் 1 முதல் 6 வரை நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த தேர்வை நடத்த வேண்டாம் என்றும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேர்வை ஒத்திவைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறிவந்தன. இதுகுறித்த வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் நடைபெற்றது ஆனால் நீதிமன்றம் இந்த தேர்தலை நடத்த
 

நாடு முழுவதும் இன்று நடத்தப்படுகிறது ஜே.இ.இ., தேர்வுகள்: மாணவர்கள் ஆர்வம்

இந்தியாவில் உள்ள 7 ஐஐடி கல்வி நிறுவனங்களில் சேர்வதற்காக நடத்தப்படும் நுழைவுத்தேர்வு தான் ஜே.இ.இ., நுழைவுத்தேர்வு. இந்த தேர்வு செப்டம்பர் 1 முதல் 6 வரை நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த தேர்வை நடத்த வேண்டாம் என்றும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தேர்வை ஒத்திவைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் கூறிவந்தன. இதுகுறித்த வழக்கு ஒன்றும் நீதிமன்றத்தில் நடைபெற்றது

ஆனால் நீதிமன்றம் இந்த தேர்தலை நடத்த அனுமதி அளித்ததை அடுத்து தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்துவதில் தீவிரமாக உள்ளது. இதனையடுத்து திட்டமிட்டபடி இன்று காலை முதல் மாணவர்கள் தேர்வு எழுதும் மையத்திற்கு ஆர்வத்துடன் வந்து கொண்டிருக்கின்றனர்

மாணவர்கள் தகுந்த சமூக இடைவெளியை கடைப்பிடித்து தேர்வு மையத்திற்கு சென்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மொத்தம் 7 ஐஐடி கல்வி நிறுவனங்கள் மட்டுமே உள்ளன என்பதும் இதில் சுமார் 5,000 இடங்கள் மட்டுமே உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் நாடு முழுவதும் இந்த தேர்வை 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுத உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web