"ஜெயலலிதா மரணம்" தொடர்பான விசாரணை"; சட்டப்பேரவையில் விவாதம்!!!

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்
 
jayalalitha

தற்போது நம் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெறுகிறது. இதனால் தமிழகத்தின் முதல்வராக உள்ளார் மிக முக ஸ்டாலின். தமிழகத்தில் முதல் முறையாக முதல்வராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் தொடர்ச்சியாக சட்டப்பேரவை கூடப்பட்டு வருகிறது.  சட்டப்பேரவையில் தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.jayalalitha

மேலும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை ஆளும் கட்சியினர் அறிவித்துக் கொண்டே வருகின்றனர். அதன் வரிசையில் மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா மரணம் பற்றி சட்டப்பேரவையில் வாதம் ஏற்பட்டது. அதன்படி ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை விரைந்து முடிக்க திமுக எம்எல்ஏ சுதர்சனம் வலியுறுத்தியுள்ளார். அதில் குறுக்கிட்ட எதிர்க்கட்சித் தலைவரும் எடப்பாடிபழனிசாமி சட்டப்பேரவையில் பேசுவது முறையல்ல என்று எதிர்ப்பு தெரிவித்தார்.

மேலும் அவர் திமுகவின் பேச்சை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடிபழனிசாமி கூறியுள்ளார். மேலும் அதற்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நீதிமன்ற வழக்கில் உள்ள விசாரணைகளை தான் சட்டப்பேரவையில் விவாதிக்க கூடாது என்றும் பதில் அளித்துள்ளார். மேலும் எம்எல்ஏ சுதர்சனம் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டாம் என்றும் முதல்வர் வலியுறுத்தியுள்ளார்.

From around the web