ஜெயலலிதா பிறந்தநாள் இனி அரசு விழா: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார் 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவகம் நேற்று மெரினாவில் திறக்கப்பட்ட நிலையில் இன்று ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கிய தமிழக முதல்வர், இன்று அந்த இல்லத்தை திறந்து வைத்தார் 

மேலும் இந்த விழாவில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அதிமுக எம்எல்ஏக்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் ஜெயலலிதா நினைவு இல்லத்தை திறந்தபின் சென்னை காமராஜர் சாலையில் உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் வெண்கல சிலையை அவர் திறந்து வைத்தார்.

edappadi

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ’இனி ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று கூறியுள்ளார். ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதியன்று அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்வர் கூறியிருந்தாலும், ஒருவேளை அதிமுக ஆட்சி மாறி திமுக ஆட்சி உருவானால் ஜெயலலிதா பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடுமா? என்ற கேள்வியை பொதுமக்களும் நெட்டிசன்களும் எழுப்பியுள்ளனர்

From around the web