பிரதமர் ராஜினாமா எதிரொலி, ஒரே நாளில் 47 பில்லியன் நஷ்டம்: எந்த நாட்டில் தெரியுமா?

ஜப்பான் பிரதமர் உடல்நிலை குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக சமீபத்தில் அறிவித்துள்ள நிலையில் ஜப்பானிய பங்கு வர்த்தகம் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளது ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அவர்கள் உடல்நிலை குறைவு காரணமாக திடீரென பதவியை ராஜினாமா செய்தார் என்ற தகவல் வெளி வந்த அடுத்த நிமிடமே ஜப்பானிய பங்குச்சந்தை பெரும் சரிவை சந்தித்தது இன்றைய பங்குச்சந்தை முடிவில் ஜப்பானிய பங்குச்சந்தையில் 47 பில்லியன் டாலர் அளவுக்கு குறைந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை
 

பிரதமர் ராஜினாமா எதிரொலி, ஒரே நாளில் 47 பில்லியன் நஷ்டம்: எந்த நாட்டில் தெரியுமா?

ஜப்பான் பிரதமர் உடல்நிலை குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்வதாக சமீபத்தில் அறிவித்துள்ள நிலையில் ஜப்பானிய பங்கு வர்த்தகம் மிகப்பெரிய சரிவைக் கண்டுள்ளது

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அவர்கள் உடல்நிலை குறைவு காரணமாக திடீரென பதவியை ராஜினாமா செய்தார் என்ற தகவல் வெளி வந்த அடுத்த நிமிடமே ஜப்பானிய பங்குச்சந்தை பெரும் சரிவை சந்தித்தது

இன்றைய பங்குச்சந்தை முடிவில் ஜப்பானிய பங்குச்சந்தையில் 47 பில்லியன் டாலர் அளவுக்கு குறைந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாளில் மிகப்பெரிய அளவில் பங்கு ஜப்பானிய பங்குச்சந்தை குறைந்திருப்பது இதுதான் முதல் முறை என்று கூறப்படுகிறது

கடந்த 8 ஆண்டுகளில் சரிந்த பங்குச்சந்தையின் அளவைவிட இது மிகப்பெரியது என்றும், பங்குச்சந்தை சரிவு மட்டுமின்றி ஜப்பானிய நாணயமும் படு வீழ்ச்சி அடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இருப்பினும் புதிய பிரதமர் பதவி ஏற்றதும் பங்குச்சந்தை மீண்டும் நல்ல நிலைக்கு வரும் என்று முதலீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

From around the web