ஜல் சக்தி அபியான் திட்டத்திற்கு ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 2019-20 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் முழு மூச்சுடன் தயாராகிவிட்டது. வருமான வரி ரீதியிலான விலக்குகள், விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் போன்ற பிரிவுகளில் சிறந்த திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். தற்போது தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைத்து நீரை சேமித்து வைப்பதற்கான திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தகவல்கள்
 
ஜல் சக்தி அபியான் திட்டத்திற்கு ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ள நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான 2019-20 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் முழு மூச்சுடன் தயாராகிவிட்டது.

வருமான வரி ரீதியிலான விலக்குகள், விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள், இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் போன்ற பிரிவுகளில் சிறந்த திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கையில் மக்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜல் சக்தி அபியான் திட்டத்திற்கு ரூ. 10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

 தற்போது தண்ணீர் பிரச்சனையை தீர்த்து வைத்து நீரை சேமித்து வைப்பதற்கான திட்டத்திற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்திட்டம் அனைத்துத் தரப்பிற்கும் பொதுவான திட்டம் என்பதால் நிச்சயம் இத்திட்டம் பட்ஜெட்டில் இடம் பெறும் என்பதில் சந்தேகமில்லை என்று செய்திகள் வெளியாகின்றன.

மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் ஜூலை 1 ஆம் தேதி ஜல் சக்தி அபியான் திட்டத்தை தொடங்கிவைத்தார். இதன் மூலம் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதோடு விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும் தீர்வுகாணப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியும் பொதுமக்களுடன் இணைந்து தண்ணீர் பிரச்சனைக்கு பாஜக நிச்சயம் தீர்வுகாணும் என்று தெரிவித்திருந்தார். இதனை நிறைவேற்றும் பொருட்டு நீரை சேமிப்பதற்காக பட்ஜெட்டில் 10 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்க முடிவெடுத்துள்ளதாக உறுதியாகிவிட்டது. இது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற திட்டமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

From around the web