ஜெயபால் ரெட்டியின் மறைவு அதிர்ச்சியாக உள்ளது – வைகோ இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டி ஒரு தலைசிறந்த பாராளுமன்ற உறுப்பினர் என்று புகழாரம் சூட்டியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவரது மறைக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்திய நாட்டின் தலைசிறந்த நாடாளுமன்ற மேதைகளில் ஒருவரான ஆந்திரத்தைச் சேர்ந்த என் உயிரான நண்பர் ஜெயபால் ரெட்டி அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். மாற்றுத் திறனாளியான ஜெயபால் ரெட்டி அவர்கள், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் எண்ணற்ற விவாதங்களில்
 

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயபால் ரெட்டி ஒரு தலைசிறந்த பாராளுமன்ற உறுப்பினர் என்று புகழாரம் சூட்டியுள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவரது மறைக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். 

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இந்திய நாட்டின் தலைசிறந்த நாடாளுமன்ற மேதைகளில் ஒருவரான ஆந்திரத்தைச் சேர்ந்த என் உயிரான நண்பர் ஜெயபால் ரெட்டி அவர்கள் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். 

ஜெயபால் ரெட்டியின் மறைவு அதிர்ச்சியாக உள்ளது – வைகோ இரங்கல்


மாற்றுத் திறனாளியான ஜெயபால் ரெட்டி அவர்கள், நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் எண்ணற்ற விவாதங்களில் எடுத்து வைத்த கருத்துகள் ஈடு இணையற்றவை. ஆங்கிலத்தில் அற்புதமாக பேசும் வல்லமை உள்ளவர். 

அவர் மறைந்த செய்தி கேட்டவுடன், அவரது மூத்த மகன் அரவிந்த் ரெட்டி அவர்களோடு அலைபேசியில் பேசினேன். சாதாரண காய்ச்சல் என்றுதான் மருத்துவமனையில் சேர்த்தோம். ஒரே நாளில் அவர் உயிர் நீத்தது பேரிடியாய் எங்கள் குடும்பத்தில் விழுந்துவிட்டது என்றார். 

ஜெயபால் ரெட்டி அவர்கள் மத்திய அரசின் செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருந்தபோது, என்னுடைய கலிங்கப்பட்டி கிராமத்தில் தேசிய கைப்பந்தாட்டப் போட்டியை நான் நடத்தினேன்.

என்னுடைய வேண்டுகோளை ஏற்று இந்திய அரசு தொலைக்காட்சிகளில் அந்தப் பந்தயத்தை ஒளிபரப்பச் செய்தார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்ணீர் அஞ்சலியை மிகுந்த துக்கத்தோடு தெரிவித்துக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார். 

From around the web