செப்டம்பரில் ஆரம்பத்திலேயே செம்மையா பெய்யப் போகுது மழை!!

தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு
 
rain

தற்போது நம் தமிழகத்தில் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் அதுவும் குறிப்பாக கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் மழைச்சாரல் ஆனது வீசிக்கொண்டே உள்ளது. இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. மேலும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.rain

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது, மேலும் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. நாளை வட கடலோர மாவட்டங்கள்,  புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறுகிறது.

ஆனால் செப்டம்பர் 1ஆம் தேதியில் கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. செப்டம்பர் 2,3 தேதிகளில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்புள்ளதாக வானிலை உள்ளது.

From around the web