இந்த மாவட்டத்தில் இருந்தா கண்டிப்பா 2 மணி நேரத்தில் மழை வரும்!!

தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
 
rain

தற்போது நம் தமிழகத்தில் கோடை காலம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழைச்சாரல் பெய்கின்றன. மேலும் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தின் கேரளப் பகுதியில் அமைந்த காணப்பட்ட பல மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகின்றன. மேலும் தென்காசியில் உள்ள குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.kodaikanal

இந்நிலையில் தற்போது தமிழகத்திற்கு இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் கண்டிப்பாக மழை வர வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் சில மாவட்டங்களில் பெயரையும் குறிப்பாக கூறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கரூர், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது .இந்த மூன்று மாவட்ட மக்கள் இந்த தென்மேற்கு பருவ மழையை மிகவும் கொண்டாடுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் தற்போது படிப்படியாக வெயிலின் தாக்கம் குறைந்து வருவது மக்களுக்கு ஒரு இதமானதாக காணப்படுகிறது. மேலும் தமிழகத்தில் படிப்படியாக நோயின் தாக்கம் குறைந்து வருவது மக்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது.பொதுவாக திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் பகுதியில் எப்பொழுதும் வானிலை குளிர்ச்சியாகவே காணப்படுவதால் அங்குள்ள மக்களுக்கு இவை மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் காணப்படுகிறது.

From around the web