இன்னும் சில நாட்களுக்கு தமிழகத்தில் ஜோர் மழை தான்!!

தமிழகத்தில் நாளை மற்றும் சில நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது
 
rain

தற்போது தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து கொண்டு வருகிறது. இது மக்களுக்கு மிகுந்த குளிர்ச்சியான வானிலை உருவாகிக்கொண்டே உள்ளது. மேலும் பல பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறையும் தீர்ந்தது. மேலும் தமிழகத்தின் வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளைய தினம் 8 மாவட்டங்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.rain

அதன்படி நீலகிரி தேனி திண்டுக்கல் சேலம் கள்ளக்குறிச்சி வேலூர் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் திருவண்ணாமலை திருப்பத்தூர் மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கோவை ஈரோடு திருப்பூர் கிருஷ்ணகிரி தர்மபுரி புதுக்கோட்டை திருச்சியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது

 அதோடு மட்டுமில்லாமல் செப்டம்பர் 3 ஆம் தேதியில் நீலகிரி தேனி திண்டுக்கல் தர்மபுரி கிருஷ்ணகிரி கள்ளக்குறிச்சி யிலும் பலத்த மழைபெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. திருவண்ணாமலை வேலூர் திருப்பத்தூர் மாவட்டங்களிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் பெரம்பலூர் திருச்சி அரியலூர் புதுக்கோட்டை ஈரோடு விழுப்புரம் விதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

செப்டம்பர் 4ஆம் தேதியில் நீலகிரி கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்துள்ளதாக வானிலை  மையம் கூறியுள்ளது நீலகிரி திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டின் மாவட்டங்கள் புதுச்சேரி காரைக்கால் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

From around the web