தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வெப்பத்தைத் தணித்தது!

தமிழகத்தில் சென்னை சிவகங்கை புதுக்கோட்டை மாவட்டங்களில்திருச்சி மாவட்டங்களில் காலை முதலே லேசான மிதமான மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி!
 
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வெப்பத்தைத் தணித்தது!

தமிழகத்தில் கோடை காலம் என்றால் அனைவரும் முதலில் நினைவு வருவது மே மாதம்தான். ஆனால் மே மாதம் தொடங்க இன்னும் சில நாட்கள் உள்ளதால் தமிழகத்தில் வெப்பநிலை தாக்கம் தலைவிரித்தாடுகிறது. மேலும் ஒரு சில பகுதிகளில் வெளியே வரமுடியாத அளவிற்கு இருந்ததுவெப்பநிலை சுட்டெரிக்கிறது.இந்நிலையில் இன்று காலை இந்திய வானிலை ஆய்வு மையமானது தமிழக மக்களுக்கு சில மகிழ்ச்சியான தகவலை வெளியிட்டனர். அதன்படி தமிழகத்தில் வரும் ஐந்து நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

rain

குறிப்பாக தென் தமிழக  பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் காலை முதலே லேசான மற்றும் மிதமான மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இன்று காலைசென்னையில் உள்ள கோயம்பேடு, அண்ணா நகர் பகுதிகளில் காலை முதலே லேசான முதல் மிதமான மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் கோடையின் வெப்பத் திணையும் வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

திருச்சி மாநகரில் பல பகுதிகளில் லேசான மழை பெய்ததால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக பொன்மலைப்பட்டி போன்ற பகுதிகளில் மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் காலை முதலே மிதமான மழை பெய்தது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் காலையில் அரை மணி நேரத்துக்கு மழை பெய்ததால் சாலைகளில் தண்ணீர் ஓடுகிறது. மேலும் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியிலும் மலையானது காலையில் மழை பெய்தது. சிவகங்கை மாவட்டங்களில் மழை பெய்தது குறிப்பாக கானாடுகாத்தான் பகுதியில் லேசான முதல் மிதமான செய்யப் பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

From around the web