இன்னைக்கு பத்து மாவட்டத்திற்கு பெய்யப் போகிறது மழை! எந்தெந்த மாவட்டங்கள்?

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
 
இன்னைக்கு பத்து மாவட்டத்திற்கு பெய்யப் போகிறது மழை! எந்தெந்த மாவட்டங்கள்?

மக்கள் மத்தியில் கோடைகாலம் என்றாலே அனைவரும் கூறுவது மே மாதம்தான். இந்த மே மாதம் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் தற்போது பல பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் ஒரு சில பகுதிகளில் வெப்பமானது மிகவும் சுட்டெரிக்கிறது. இதன் மத்தியில் சில தினங்களாக ஒரு சில இடங்களில் கனமழை பெய்து மக்களை  வெப்பத்தில் இருந்து காப்பாற்றியது. இந்நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் மேலும் ஒரு இன்பமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் அடுத்த 10 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியது.

weather

மேலும் இந்த மழையானது வெப்பச்சலனம் காரணமாக ஏற்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது .அதன்படி நீலகிரி கோவை திருப்பூர் சேலம் திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் தேனி கரூர் மதுரை விருதுநகர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஏப்ரல்20ல் நீலகிரி கோவை தென்காசி சிவகங்கை விருதுநகரில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.மேலும் ஏப்ரல் 21, 22, 23 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ள நிலையில் தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் தகவலை கூறியுள்ளது மிகவும் சந்தோஷத்தை அளிக்கிறது.

From around the web