கன்னியாகுமரியில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை!! தாமிரபரணியில் வெள்ளம் அபாயம்!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய மழை பெய்ததால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஓடுகிறது!
 
kaniyakumari

தமிழகத்தில் முக்கடல் பூமி என்று அழைத்தால் அதனை கன்னியாகுமரி என்றே கூறலாம். இந்த கன்னியாகுமரி மட்டுமின்றி இந்தியாவின் தென்கடைசி மாவட்டம் ஆகவும் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலையும் அங்குள்ள விவேகானந்த மண்டபமும் இந்திய மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் பார்வையையும் தன் வசமாக இருக்கிறது. மேலும் இங்கு உள்ள நாகர்கோவில் தக்கலை போன்ற பகுதிகளில் எப்பொழுதும் குளிர்ந்த வானிலையே இருப்பதால் இந்த பூமியானது அனைவருக்கும் மிகுந்த இதமான பூமியாகவும் காணப்படுகிறது.petchiparai

மேலும் இத்தகைய சிறப்பு பெற்ற கன்னியாகுமரியில் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்ததாக கூறப்படுகிறது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் 13 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்தது. ஆனால் நேற்றிரவு பெய்த மழையானது காலை வரைக்கும் தொடர்ந்து பெய்தது. கன்னியாகுமரியில் உள்ள குழித்துறை பகுதியில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் போல் ஓடுகிறது.

இதனால் ஆற்றின் தாழ்வான பகுதியில் வாழும் மக்கள் அவ்விடத்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஆற்றங்கரையோர தாழ்வான பகுதியில் உள்ளவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுத்துள்ளது. பெருஞ்சாணி அணை ஆனது 77 அடி உயரமுள்ள அணை யில் 65 அடி நீர்மட்டம் எட்டியதால் இந்த அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் தற்போது வெள்ளம் பாய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web