இதற்கு பெயர் தன் முழு ஊரடங்கா? அதிர்ச்சி புகைப்படம்

 
இதற்கு பெயர் தன் முழு ஊரடங்கா? அதிர்ச்சி புகைப்படம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் ஒரு சில தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து அந்த தளர்வுகளை பயன்படுத்தி பலர் தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

குறிப்பாக காலை 6 மணி முதல் 10 மணி வரை அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டதை அடுத்து அந்த நான்கு மணி நேரத்தில் பலர் வீட்டை விட்டு நடந்தும் வாகனங்களில் வந்து சென்று கொண்டிருப்பதால் சாலைகள் பிசியாக உள்ளது. தமிழகத்தில் முழு ஊரடங்கா? அல்லது நார்மலான தினமா? என்ற சந்தேகம் வரும் அளவுக்கு பல இடங்களில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

madurai

குறிப்பாக மதுரையில் பிசியாக இருக்கும் ஒரு சாலையின் புகைப்படம் சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நெட்டிசன்கள் மதுரைக்கு முழு ஊரடங்கில் இருந்து விலக்கா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர். பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே கொரோனாவில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள முடியும் என்றும் இவ்வாறு பொறுப்பின்றி தேவையில்லாமல் வெளியே வருவதால் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தான் செய்யும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

From around the web