பிரபல சுற்றுலா தீவு திறப்பு: ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி!

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய கணக்கின்படி உலகம் முழுவதும் 2.5 கோடிக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவை அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் தினமும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் கொரோனாவுக்கு எதிராக அந்நாடு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த
 

பிரபல சுற்றுலா தீவு திறப்பு: ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி!

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போதைய கணக்கின்படி உலகம் முழுவதும் 2.5 கோடிக்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவை அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ள பிரேசில் நாட்டில் தினமும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் கொரோனாவுக்கு எதிராக அந்நாடு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்தும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க அவர்களுக்காக ஒரு சுற்றுலா தளம் திறக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான பெர்னாண்டோ டிநோர என்ற தீவு திறக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் இருக்கும் இந்த தீவு கடந்த சில மாதங்களாக ஊரடங்கு காரணமாக மூடப்பட்டிருந்தது

தற்போது இந்த தீவு திறக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இந்த தீவு கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் கூறப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க இந்த தீவுக்கு சுற்றுலா செய்யலாம் செல்லலாம் என்றும் இந்த தீவுக்கு வருபவர்கள் கொரோனா பாசிட்டிவ் என்ற சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் இந்த வித்தியாசமான அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

From around the web