தமிழக பிஜேபி இணையதளம் தொடங்கியது இதற்காகத்தானா? கனிமொழி கேள்வி

பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 மூன்று சம தவணைளாக, தலா ரூ.2000 என வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக இந்தத் தொகை செலுத்தப்பட்டு வந்ததாகவும் செய்தி வெளியானது

இந்த நிலையில் பிரதமரின் கிசான் திட்டத்தின் கீழ் பணம் பெற்று தருவதாகக் கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மோசடி நடைபெற்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த மோசடி குறித்து திமுக எம்பி கனிமொழி தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது;

பிரதம மந்திரி கிஸான் திட்டத்தில் 110 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கொள்ளைகள் அனைத்தும் பொதுமுடக்க காலத்தில்தான் நடைபெற்றுள்ளன. வங்கிகளில் கடன் பெறுவதற்கு நாங்கள் உதவுகிறோம் என்று தமிழக பிஜேபி இணையதளம் தொடங்கியது இதற்காகத்தானா?  5 லட்சம் போலி பயனாளிகள் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பதென்பது, ஆளும் அதிமுக தலைவர்களின் உதவி இன்றி நடந்திருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.

கனிமொழியின் இந்த குற்றச்சாட்டுக்கு அதிமுக மற்றும் பாஜக என்ன பதில் கூறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web