இன்னுமா இந்த போராட்டம் ஓயவில்ல? ஒரேயடியாக 154 நாள்களை தொட்டது!

3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் இன்றைய தினத்தோடு 154 நாளாக போராட்டம் நீடித்துள்ளது!
 
இன்னுமா இந்த போராட்டம் ஓயவில்ல? ஒரேயடியாக 154 நாள்களை தொட்டது!

முன்னொரு காலத்தில் மக்களிடையே மிகவும் செல்வாக்குப் பெற்றும் பணத்தையும் மனத்திலும் நல்லதொரு மதிப்பினை பெற்று காணப்பட்டவர் விவசாயிகள். மேலும் தற்போது நாம் விவசாயிகளின் அருமை பெருமை தெரியாமல் அவர்களை மேலும் மேலும் துன்பத்தைக் கொடுக்கிறோம். பல பகுதிகளில் விவசாயிகளின் தற்கொலை ஆனது தினந்தோறும் நடைபெறும் இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மேலும் அவர்கள் மீது கடன்  சுமத்தி அவர்களை இறப்பின் பாதைக்கு கொண்டு செல்கிறது.farmers

விவசாயிகளுக்கு மக்கள் மட்டுமின்றி மழையும் பல்வேறு சமயங்களில் சோதிக்கின்றன. ஒரு சில பகுதிகளில் மழை பெய்யாததால் வானத்தை நம்பி விவசாயம் மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. தற்போது விவசாயிகள் போராட்டம் கடந்த 5 மாதங்களாக நடைபெறுவது பலருக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் உண்டாக்கி உள்ளது. அதன்படி அவர்கள் டெல்லியில் 154 நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் மத்திய அரசால் விதிக்கப்பட்ட மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை என்று அங்குள்ள விவசாயிகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.

மேலும் மத்திய அரசால் 3 வேளாண் சட்டங்கள் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.அதனால் டெல்லியில் அரியானா டெல்லி விவசாயிகள் ஏராளமானோர் போராட்டத்தில் உள்ளனர்.இதனால் விவசாயிகள் போராடுவது அவர்களுக்கு மட்டுமின்றி நாட்டுக்கே மிகவும் பாதிப்பாக உள்ளது என்றே கூறலாம். காரணம் விவசாயிகள் சேற்றில் கால் வைக்காவிட்டால் நாம் சோற்றில் கை வைக்க முடியாது.

From around the web