இது ஆறா? மேகமா? இப்படி வெள்ளமாக போகிறது ஆற்றில் "நுரை'!

யமுனை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
 
yamuna

இந்தியாவிலேயே அதிகம் மக்களால் பேசப்படுகின்ற புனித நீராக காணப்படுவது கங்கை ஆறு. ஆனால் கங்கை பல பிணங்கள் மிதக்க பட்டது. மக்களுக்கு மேலும் ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது, புனித மட்டுமின்றி குடிநீர் பாதிப்பையும் உருவாக்குவது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல ஆறுகளிலும் அவ்வப்போது பிணங்களும் தொழிற்சாலை கழிவுகளும் கலப்பது வாடிக்கையாகவே உள்ளது.அவ்வப்போது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்திய மக்கள் அளவில் அதிகமாக பேசப்படுகின்ற நதிகளில் வரிசையில் கங்கைக் அடுத்தபடியாக அனைவராலும் கூறப்படுவது யமுனை ஆறு.river

இந்த யமுனை ஆறானது உத்தரகாண்ட் ஹரியானா டெல்லி மாநிலங்கள் வழியே சென்று உத்தரபிரதேசத்தில் கங்கையில் கலந்து வருகிறது, மேலும் நான்கு மாநிலத்தில் உள்ள பல பகுதிகளில் குடிநீர் வாழ்வாதாரமாகவும் இந்த நதி காணப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இந்த  நிலையில் இன்று இந்த நதியோரம் மக்கள் பெரும் ஆச்சரியத்தை கண்டுள்ளனர். அதன்படி அந்த நதியில் அதிகமாக நீரை விட நுறையே மிதந்து செல்வது மக்களுக்கு பெரும் கவலையை உருவாக்கியது.

மேலும் இவை பல தொழிற்சாலைக் கழிவுகளாலும் நகர்ப்புற கழிவுகளாலும் கலந்து யமுனை ஆறு பெரிதும் பாதித்துள்ளது. மேலும் டெல்லியில் மாசுக்களால் நுரை பொங்கி வழியும் யமுனை ஆற்றின் நீர் அனைவருக்கும் கஷ்டத்தை உருவாகியுள்ளது. மேலும் அங்கு ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்துள்ளனர். மக்கள் இது யமுனை ஆறு மட்டுமின்றி அவ்வப்போது நம் தமிழகத்தில் உள்ள பல நதிகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

From around the web