டிவி மெகா சீரியல்களுக்கு தணிக்கை கிடையாதா? நீதிபதிகள் கேள்வி!

 

திரைப்படங்களுக்கு தணிக்கை இருப்பது போன்று டிவி மெகா சீரியல்களுக்கு ஏன் தணிக்கை இல்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இரண்டாம் குத்து’ திரைப்படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘பாசமலர்’ போன்ற படங்கள் குடும்ப உறவுகளைப் பற்றி இருந்தது. ஆனால் தற்போது தகாத வார்த்தைகள், இரட்டை அர்த்தங்கள் ஆகியவற்றை படத்தில் கொண்டு வந்து படத்திற்கான விளம்பரத்தைத் தேடுகின்றனர். \

திரைப்படங்கள் மட்டுமின்றி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் மெகா சீரியல்களில் ஆபாசமான பேச்சுகள், வசனங்கள், தகாத உறவுகள் அதிகம் பேசப்படுகிறது. இதற்கு தணிக்கைக்குழு எதுவும் கிடையாதா? எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும் இரண்டாம் குத்து’ படத்தில் நடித்த நடிகர்கள் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் யூடியூப், பேஸ்புக், கூகுள் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பவும் மத்திய தணிக்கைக் குழு மற்றும் மத்திய தகவல் தொடர்புத்துறையை எதிர் மனுதாரராக இந்த வழக்கில் இணைக்கவும், மத்திய, மாநில அரசுகள் இந்த மனுவுக்கு பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு நவம்பர் 20-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தகக்து

From around the web