போதிய அளவு ஆக்சிசன் உள்ளதா? பதில் அளிக்க வேண்டும் தமிழக அரசு!

தமிழகத்தில் போதிய அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளதா என தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
 
போதிய அளவு ஆக்சிசன் உள்ளதா? பதில் அளிக்க வேண்டும் தமிழக அரசு!

தற்போது உலகமெங்கும் பரவி காணப்படும் கொரோனா தொற்று நோய்க்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.எனினும் இந்தியாவில் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்நோயானது பரவ தொடங்கியது. ஆனால் கடந்த ஆண்டின் இறுதிக்குள் கொரோனா நோயானது இந்தியாவில் கட்டுப்பாட்டிற்குள் வந்த நிலையில் சில தினங்களாக இந்தியாவில் இந்த நோயின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் டெல்லி மும்பை சென்னை போன்ற மாநகரங்களில் கொரோனா நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்தியாவில் மத்திய அரசின் சார்பில் தடுப்பூசிகள் பல்வேறு மாநில அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகின்றன.

highcourt

இந்நிலையில் இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது ஆக்சிசன் தேவைப்படுகிறது. ஆனால் தற்போது இந்தியா முழுவதும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது.  தமிழகத்திலும் இந்த ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுகிறது ஒரு சில பகுதிகளில், ஆயினும் தமிழகத்திலிருந்து இன்றையதினம் ஆக்சிஜன் ஆந்திரா மற்றும் தெலுங்கானா வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.

 மேலும் தமிழகத்தில் தயாரான ஆக்சிசனை ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.மேலும் தமிழக அரசிடம் கேள்வி ஒன்றை அமைத்துள்ளது. மேலும் தமிழகத்தில் போதிய அளவு ஆக்சிஜன் இருப்பு உள்ளதா? என தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

From around the web