அரியர் தேர்வை நடத்த போகிறதா தமிழக அரசு? மாணவர்கள் அதிர்ச்சி

அரியர் தேர்வுகள் ரத்து, மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் என தமிழக அரசு அறிவித்த நிலையில் தற்போது அகில இந்திய தொழில்நுட்ப குழுமத்தின் அழுத்தம் காரணமாக அரியர் தேர்வுகளை நடத்த தமிழக அரசு தயாராக இருப்பதாக வெளிவந்த செய்தி மாணவர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது 

இந்த நிலையில் இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் அவர்கள் விளக்கம் அளிக்கையில் ’அரியர் தேர்வு தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கழகத்திற்கு எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை என்றும் அரியர் தேர்வுகளை நடத்த அரசு தயாராக இருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்தே மாணவர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் 

இருப்பினும் அரியர் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கழகம் அனுப்பிய ஈ-மெயில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எனவே அரியர் தேர்வை மீண்டும் மாணவர்கள் எழுதவேண்டும் என்ற அறிவிப்பு எப்போது வேண்டுமனாலும் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

From around the web