ரஜினிகாந்த் தாக்கல் செய்த மனு தவறானதா?

 

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு ஒன்றை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்குவதால் இந்த மனுவை தள்ளுபடி செய்து அபராதம் விதிக்கப்போவதாக எச்சரித்தார். இதனை அடுத்து ரஜினிகாந்த் தரப்பில் மனு வாபஸ் பெறப்பட்டது என்பது குறிப்பிடதக்கது

இந்த நிலையில் நெட்டிசன்கள் ரஜினிகாந்தின் மனு தவறா? என்பது குறித்த கேள்வியை எழுப்பி உள்ளனர். ஒரு கட்டிடம் அல்லது அலுவலகம் ஒரு மாதத்திற்கு மேல் காலியாக இருந்தால் அந்தக் கட்டிடத்திற்கு விதிக்கப்படும் சொத்து வரிக்கு விலக்கு கேட்டு மாநகராட்சியில் விண்ணப்பிக்கலாம்  என்று விதிகள் உள்ளது. இந்த விதி தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றும் பின்பற்றப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

அந்த அடிப்படையில்தான் ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்தார் என்றும், ரஜினிகாந்த் தனது கோரிக்கையை சென்னை மாநகராட்சியிடம் தான் வைக்க வேண்டும் என்றும் இதற்காக நீதிமன்றத்திற்கு வரத் தேவையில்லை என்றும் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்ததற்கு தான் அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது என்றும், அவர் அவரது கோரிக்கையை குறித்து நீதிபதி எதுவும் விமர்சனம் செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது

எனவே ரஜினிகாந்த் நீதிமன்றத்திற்கு சென்றதற்கு பதிலாக சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்து இருந்தால் இந்த சிக்கல் ஏற்பட்டிருக்காது என்றும் நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர்

From around the web