முதல்வரை சசிகலா சந்திக்கவிருக்கின்றார் என்ற தகவல் உண்மையா?

 

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா கடந்த மாதம் 27ம் தேதி விடுதலை ஆனார் என்பதும் சமீபத்தில் அவர் பெங்களூரில் இருந்து சென்னை திரும்பினார் என்பதும் தெரிந்ததே.

சென்னை திரும்பிய சசிகலாவுக்கு அமமுக தொண்டர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாதான் என்று தினகரன் உள்பட அமமுகவினர் கூறி வரும்போது அதிமுகவிற்கும் சசிகலாவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என முதல்வர் உட்பட அமைச்சர்கள் அனைவரும் தெரிவித்து வருகின்றனர்

eps and sasikala

இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா சந்திக்க இருப்பதாகவும் இன்று அந்த சந்திப்பு நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும் பல ஊடகங்களில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் சசிகலா தரப்பு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது

கொரோனாவில் இருந்து குணமாகி உள்ள சசிகலா, மருத்துவர்களின் ஆலோசனைப்படி அடுத்த சில நாட்கள் யாரையும் சந்திக்க மாட்டார் என்றும் அடுத்த வாரத்தில் தான் அவர் தனது அரசியல் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும், அதுவரை சசிகலா முழு ஓய்வு எடுக்க இருப்பதாகவும் கூறியுள்ளனர். இதனை அடுத்து இன்றோ நாளையோ தமிழக முதல்வரை சசிகலா சந்திக்கப் போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது.

From around the web