கொரனா தடுப்பூசியின் விலை ஆயிரம் ரூபாயா? சீரம் நிறுவனம் விளக்கம்!

 

கடந்த 10 மாதங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் சீரம் இன்ஸ்டியூட் நிறுவனம் தடுப்பூசி கண்டுபிடித்து உள்ளது என்பதும் இந்த தடுப்பூசி விரைவில் மக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது என்பதும் தெரிந்ததே 

இந்த தடுப்பூசியை மத்திய அரசுக்கு 200 ரூபாய்க்கு விற்கப் போவதாக சீரம் இன்ஸ்டியூட் நிறுவனம் சமீபத்தில் அறிவித்து இருந்தது. ஆனால் அதே நேரத்தில் மத்திய அரசும் சரி மாநில அரசும் சரி இந்த மருந்தை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்க உள்ளது என அறிவித்துள்ளன

vaccine

இந்த நிலையில் தற்போது திடீரென சீரம் நிறுவனத்தின் தடுப்பூசி ரூபாய் ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனத்தின் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

இந்தியாவில் முதல் பத்து கோடிக்கு மக்களுக்கு மட்டுமே ரூபாய் 200 விலைக்கு தடுப்பூசி விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாகவும் அதன் பின்னர் வெளிச்சந்தையில் இந்த தடுப்பூசியின் விலை ரூபாய் ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் 

இந்தியாவில் உள்ள அனைத்து மக்களுக்கும் ரூபாய் 200 விலையிலேயே சீரம் நிறுவனம் தடுப்பூசியை விற்பனை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து மத்திய மாநில அரசுகள் சீரம் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web