ஆம்புலன்ஸ் காரணமா? ஹாஸ்பிடல் காரணமா? யார் காரணம் இளைஞர் உயிரிழப்புக்கு!!!

கிருஷ்ணகிரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது!
 
ambulance

தற்போது நம் நாட்டில் பல பகுதிகளில் உள்ள மருத்துவ மனைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. காரணம் என்னவெனில் தற்போது நம் நாட்டில் உள்ள பல மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன. மேலும் நம் நாட்டில் கட்டுப்படுத்தப்பட்ட கொரோனா  வைரஸ்  மீண்டும் எழுந்துள்ளது. இதனால் நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் கொரோனா  நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளன. மேலும் பல தனியார் மருத்துவமனைகளிலும் இதர சிகிச்சைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இந்த கொரோனா சிகிச்சைக்காக தங்களது பகுதியில் உள்ள சில படுக்கைகளை இதற்கென்று ஒதுக்கி வைக்கின்றனர்.ambulance

ஆயினும் பலரும் மருத்துவமனைக்குச் செல்லும்போது மருத்துவமனை முழுவதும் நிறைந்ததாக காணப்படுகிறது. இதனால் அவர்கள் தனித்தனி முகாம்கள் மூலம் தனிமைப் படுத்தப் படுகின்றனர். இருப்பினும் இந்த நோயினால் பாதிக்கப்படுவார்கள் சிகிச்சை பலனின்றி தொடர்ந்து தமிழகத்தில் உயிரிழப்பதும் உருவாக்கியது. மேலும் அவர்களுக்கு உதவி செய்வதற்கு ஆம்புலன்ஸ் வசதியும் அதிகரித்துள்ளது நம் தமிழக அரசு. ஆனால் தற்போது ஒரு இளைஞர் ஒருவர் ஆம்புலன்சில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகவும் வேகமாக பரவுகிறது.

மேலும் அந்த இளைஞர் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்படி கிருஷ்ணகிரியில் கொரோனா  தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் ஆம்புலன்ஸ் லேயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் அரசு மருத்துவமனையில் படுக்கை கிடைக்காததால் நான்குமணி நேரமாக கொரோனா  பாதித்த இளைஞர் ஆம்புலன்ஸ் லேயே காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது ஆம்புலன்சில் இருந்த ஆக்சிசன் சேர்ந்ததால் மூச்சுத்திணறி இளைஞர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

From around the web