ம.நீ.ம தோல்விக்கு சரத்குமார் காரணமா? நிர்வாகி தகவல்

 
ம.நீ.ம தோல்விக்கு சரத்குமார் காரணமா? நிர்வாகி தகவல்

மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்தது தான் காரணம் என அக்கட்சியின் முக்கிய நிர்வாகி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ முன்னேற்றக் கழகம் என்ற கட்சியுடன் கூட்டணி வைத்தது. கமல் கட்சி, சரத்குமார் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கியது என்பதும் ஆனால் சரத்குமார் மூன்று தொகுதிகளை திருப்பிக் கொடுத்து விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

kamal sarath

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகி பொன்ராஜ் அவர்கள் கூறியபோது ’சட்டமன்ற தேர்தலில் தோல்வி அடைவதற்கான காரணங்கள் மற்றும் வாக்கு சதவீதம் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினோம். இந்த ஆலோசனையில் மக்கள் நீதி மய்யம் கட்சி, பிற கட்சிகளுடன் கூட்டணி வைத்ததே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று தெரியவந்தது. மேலும் கமல்ஹாசன் உடல்நலக்குறைவு காரணமாக குறைவான அளவே சுற்றுப் பயணம் செய்ததும் தோல்விக்கு ஒரு காரணம் என்று கூறினார் 

மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வியடைந்ததற்கு கூட்டணி கட்சியான சரத்குமாரும் ஒரு காரணம் என கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

From around the web