கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பொன் ராதாகிருஷ்ணன் போட்டியா? பரபரப்பு தகவல் 

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் எம்பியாக இருந்த வசந்தகுமார் அவர்கள் சமீபத்தில் உடல்நல கோளாறு காரணமாக காலமானதை அடுத்து இந்த தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் எம்பியாக இருந்த வசந்தகுமார் அவர்கள் சமீபத்தில் உடல்நல கோளாறு காரணமாக காலமானதை அடுத்து இந்த தொகுதி காலியாக இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி மேலும் மூன்று சட்டமன்ற தொகுதிகள் தமிழகத்தில் காலியாக இருப்பதால் இந்த தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என தெரிகிறது

விரைவில் பீகார் மாநில சட்டமன்றப் பொதுத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் அந்த தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தல் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பாஜக சார்பில் கடந்த முறை போட்டியிட்டு தோல்வியடைந்த பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் மீண்டும் அதே தொகுதியில் கன்னியாகுமாரி பாஜக வேட்பாளராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

அதே போல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் வசந்தகுமாரின் மகன் விஜய்வசந்த் போட்டியிட இருப்பதாக தெரிகிறது. இந்த நிலையில் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியை பாஜக கைப்பற்றும் என பொன் ராதாகிருஷ்ணன் என்று செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியின்போது குறிப்பிட்டுள்ளார். மேலும் கட்சி மேலிடம் உத்தரவிட்டால் தான் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட தயார் என்றும் அவர் அறிவித்துள்ளார்

இதனை அடுத்து கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரம் தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

From around the web