திமுக கூட்டணியில் இணைகிறதா பாமக, தேமுதிக? முக ஸ்டாலின் பேட்டி!

 

தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் கூட்டணிகள் குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை இதுவரை பாஜக மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது. தேமுதிக மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளிடமும் அக்கட்சி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்பதும் இன்னும் கூட்டணி உறுதி செய்யப்படவில்லை என்பதும் தெரிகிறது 

அதேபோல் திமுக கூட்டணியை பொறுத்தவரை இன்னும் காங்கிரஸ், மதிமுகம் கம்யூனிஸ்ட்ம் விடுதலை சிறுத்தைகள் உள்பட எந்தக் கட்சியுமே உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 200 தொகுதிகளுக்கு மேல் திமுக போட்டியிட திட்டமிடப்பட்டுள்ளதால் அந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் வெளியேறும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

vijayakanth

இந்த நிலையில் முன்னணி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் பாமக மற்றும் தேமுதிக ஆகிய இரண்டு கட்சிகளையும் கூட்டணியில் இணைத்துக் கொள்வதில் எந்த தயக்கமும் இல்லை என்றும் எந்தவித நெருக்கடியும் இல்லை என்றும் கூறியுள்ளார். இந்த பேட்டியால் திமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் பாமக இணையுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

From around the web