மோடி ஒரு சர்வாதிகாரியா? ராகுல்காந்தி டுவிட்டால் பரபரப்பு!

 

பிரதமர் மோடியை சர்வாதிகாரி என்று மறைமுகமாக ராகுல் காந்தி பதிவு செய்துள்ள டுவிட்டால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சற்றுமுன் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பதிவு செய்த டுவிட் ஒன்றில் ஏன் சர்வாதிகாரிகளின் பெயர்கள் அனைத்தும் M என்ற எழுத்தில் தொடங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்ட பெயர்கள் பின்வருமாறு: மார்கோஸ், முசோலினி, முலோசெவிக், முபாரக், முபுடோ, முஷ்ரப் என கூறியுள்ளார்

modi rahul

இந்த டுவிட் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் M வரிசையில் உள்ளவர்கள் சர்வாதிகாரியாக இருப்பதால் மோடி பெயரும் M என்ற எழுத்தில் தொடங்குவதால் அவரும் சர்வாதிகாரி தான் என்பதை ராகுல்காந்தி மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது


ஆனால் அதே நேரத்தில் ராகுல் காந்தியின் இந்த ட்விட்டிற்கு நெட்டிசன்கள் பதிலடி வருகின்றனர். மன்மோகன் சிங், மாயாவதி, முலாயம்சிங் யாதவ், மம்தா பானர்ஜி, மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, மோதிலால் நேரு, முகமது அலி ஜின்னா ஆகியவர்களின் பெயர்களும் M எழுத்தில்தான் தொடங்குவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அப்படி என்றால் ராகுல் காந்தியின் கூற்றுப்படி இவர்களும் சர்வாதிகாரிகளா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web