உலகம் முழுவதும் இணையதளங்கள் முடங்க வாய்ப்பா?

 
internet

இன்றைய நவீன டிஜிட்டல் உலகில் இணையதளம் இல்லாமல் எந்த ஒரு செயலும் நடக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில் உலகம் முழுவதும் இணையதளங்கள் முடங்க வாய்ப்பு என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 

சூரிய காந்தப்புயல் உலகம் முழுவதும் இணையதள சேவையை பாதிக்கலாம் என்றும் கடலுக்கு அடியில் செல்லும் கேபிள்களில் சூரிய காந்த புயலால் பாதிப்பு ஏற்படலாம் என்றும் ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது 

சூரிய காந்தப்புயல் அவ்வப்போது பூமியை தாக்கி வரும் நிலையில் இந்த காந்த புயலால் ஏற்கனவே பல பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக சூரிய காந்தப்புயல் தாக்கினால் கண்டிப்பாக இணையதளங்கள் முடங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 

நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரிய காந்தப்புயல் நிகழ்ந்து வருவதாகவும் அவ்வப்போது மக்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. சூரிய காந்தப்புயலை முன்கூட்டியே கணிப்பது மிகவும் கடினம் என்பதால் சூரிய காந்தப்புயல் திடீரென வீசினால் திடீரென உலகம் முழுவதும் இணையதளம் முடங்கினால் பெரும் பிரச்சனை ஏற்படும் என்று கூறப்படுகிறது

From around the web