முக்கியமா கிராமப்புறங்களை கவனம் செலுத்த வேண்டும்; உத்தரவிட்ட பாரத பிரதமர்!

கிராமப்புறங்களில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்!
 
முக்கியமா கிராமப்புறங்களை கவனம் செலுத்த வேண்டும்; உத்தரவிட்ட பாரத பிரதமர்!

தற்போது நாட்டில் எத்திசையிலும் கொரோனா தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் நாட்டு மக்கள் அனைவரும் இதற்கு எதிராக முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி போராடி வருகின்றனர். மேலும் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் ஊரடங்கு உள்ள மாநிலங்களில் ஓரளவு இந்த கொரோனா நோய் கட்டுப்படுத்தப்பட்டது என்றே கூறலாம். இதனால் மத்திய அரசின் சார்பில் பல மாநிலங்களுக்கு இந்த தடுப்பூசிகள் அனுப்பப்பட்டன.modi

மேலும் பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி ஆனது தட்டுப்பாடு அதிகம் நிலவுகிறது.  இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் மேற்கொண்டார். ஆலோசனை கூட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து உள்ளதாகவும் அந்த உத்தரவுகள் அனைத்தும் பெரும்பாலும் கிராமங்களுக்கு புரோஜனம் ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதன்படி கிராமப்புறங்களில் வீடு வீடாக சென்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் கிராமப்புறங்களில் ஆக்சிசன் விநியோகத்தை உறுதி செய்வது மிகவும் அவசியம் என்றும் பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மேலும் கொரோனா தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட அதிகாரிகளுக்கு இத்தகைய அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார் என்பதும் கூறப்படுகிறது. மேலும் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் வேகத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

From around the web