உலக கொரோனா பாதிப்பில் மோசமான நகரம் டெல்லியா? அதிர்ச்சி தகவல்!

 

உலகில் உள்ள முக்கிய நகரங்களில் டெல்லியில் தான் மிக அதிகமாக நவம்பர் மாதத்தில் கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

அமெரிக்கா பிரேசில் உள்பட ஒருசில நாடுகளில் இரண்டாவது அலை கொரோனா நோய் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு விட்டதாக கூறப்படும் நிலையில் இந்தியாவிலும் டெல்லி உள்பட ஒருசில மாநிலங்களில் இரண்டாவது அலைக்கான அறிகுறிகள் தெரிகின்றன

இந்த நிலையில் உலகிலேயே முக்கிய நகரங்களில் கொரோனா கேஸ்கள் எண்ணிக்கையைப் பார்க்கும்போது டெல்லியில்தான் மிக மோசமான கொரோனா கேஸ்கள் பதிவாகி வருகின்றன டெல்லியில் தினமும் 7000ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு இருந்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

நவம்பர் மாதம் கணக்கில் டெல்லியில்தான் மிக அதிகமாக கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது டெல்லிக்கு அடுத்தபடியாக நியூயார்க் பிரேசில் நாட்டில் உள்ள சாவ் பாவ்லா ஆகிய நகரங்களில் அதிக கேஸ்கள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது 

நவம்பர் மாதத்தில் மிக அதிகமாக டெல்லியில் நவம்பர் 15 ஆம் தேதி 8591 பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் தற்போது 4,85,405 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 7645 பேர் பலியாகி உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

From around the web