அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுகிறதா பாஜக?தேசியத் தலைமை முடிவெடுக்கும்;

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியதா பாஜக?
 
admk

சட்டமன்றத்தில் தமிழ்நாட்டிலுள்ள பல கட்சிகள் பல்வேறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. அவற்றில் மிகவும் முக்கியமான கூட்டணியாக கருதப்பட்டது அதிமுக பாஜக இடையே கூட்டணி. அந்தப்படி  சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில் பாஜக போட்டியிட்ட 20 தொகுதிகளில் நான்கு தொகுதியில் வெற்றி பெற்றது. இதனால் 20 ஆண்டுக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவைக்கு சேர்ந்த எம்எல்ஏக்கள் காலடி வைத்தனர் என்றும் கூறப்படுகிறது.murugan

தமிழகத்தில் செப்டம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்த நிலையில் அதற்கான வேலைகள் தற்போது தமிழகத்தில் ஆரம்பித்த உள்ளன. இந்நிலையில் மீண்டும் இந்த கூட்டணி ஆனது உள்ளாட்சித் தேர்தலில் இருக்குமா? என்று அவ்வப்போது கேள்விகளும் சர்ச்சைகளும் எழுந்தன. அதன்படி உள்ளாட்சித்தேர்தல் வரும்போது சூழ்நிலையை கருதி கூட்டணி அமைக்கப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் முருகன் கூறியுள்ளார்.

மேலும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து எதிர்கொண்ட நிலையில் பாஜகவின் மாநில தலைவர் முருகன் இவ்வாறு பேட்டியளித்துள்ளார். மேலும் சில நேரங்களில் சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இருப்போம் உள்ளாட்சித் தேர்தலில் அப்படி அல்ல என்றும் அவர் கூறியுள்ளார் மேலும் பாஜக கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் எப்போதும் கொள்கை முடிவு எடுக்கும் என்று பாஜக மாநிலத் தலைவர் முருகன் கூறியுள்ளார்.

From around the web