2ஜி சேவை கைவிடப்படுகிறதா? பாராளுமன்றத்தில் மத்திய அமைச்சர் பதில் 

 

2ஜி சேவை முதன் முதலில் இந்தியாவில் அறிமுகம் செய்தபோது அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் அதன் பின்னர் 3ஜி, 4ஜி ஆகியவை அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் மெதுவாக இயங்கும் 2ஜி சேவைக்கு வாய்ப்பு இல்லாமல் போனது. மக்கள் கிட்டத்தட்ட 2 ஜி சேவையை ஒதுக்கி விட்டதாகவே கருதப்படுகிறது. மேலும் விரைவில் இந்தியாவில் 5ஜி சேவையும் அறிமுகமாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கிராமப்புறங்களில் இன்னும் 2ஜி சேவைதான் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் 2ஜி சேவைகளை கைவிடப்படுகிறதா என இன்று பாராளுமன்றத்தில் திமுக எம்பி செந்தில்குமார் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு எழுத்துபூர்வமான பதில் அளித்த தகவல் தொடர்பு துறை இணை அமைச்சர் சஞ்சய் கோத்ரே அவர்கள் 2ஜி சேவையை கைவிடும் திட்டம் மத்திய அரசிடம் எதுவும் இல்லை என்று கூறினார்

2ஜி சேவையை கை விடுவது தொடர்பாக தொலைபேசி நிறுவனங்களிடம் இருந்து பரிந்துரை எதுவும் வரவில்லை என்றும் எந்த தொழில் நுட்பத்துடன் தகவல் தொடர்பு சேவையை வழங்குவது என்பது தொலைபேசி சேவை நிறுவனங்களின் விருப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே இப்போதைக்கு 2ஜி சேவை கைவிடப்பாடது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது

From around the web