தபால் வாக்குகளில் முறைகேடுகள்! சத்யபிரதா சாகுவிடம் திமுகவினர் புகார்!

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விடம் திமுகவினர் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது!
 
தபால் வாக்குகளில் முறைகேடுகள்! சத்யபிரதா சாகுவிடம் திமுகவினர் புகார்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஆனது முன்னாடி அறிவித்தபடி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகள் உள்ளன .234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் தமிழகத்தில் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி இரவு 7 மணி வரை 12 மணி நேரமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மேலும் வாக்காளர் அனைவரும் வரிசையில் நின்று சமூக இடைவினை கடைபிடித்து ஜனநாயக கடமை ஆற்றினார். மேலும் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அசம்பாவிதங்கள் நடைபெற்றன.

dmk

ஒரு சில பகுதிகளில் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு உள்ளார். அவர் தேர்தலுக்காக பல்வேறு முன்னேற்பாடுகளையும்  அவ்வப்போது வெளியிட்டு வந்தார். மேலும் அவர் கூறியிருந்தார் தமிழகத்தில் ஆண்களை விட பெண்களே அதிகமாக வாக்களித்து உள்ளதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் தற்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இடம் திமுகவினர் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியது.

அதன்படி திமுகவை சேர்ந்த ஆர் எஸ் பாரதி புகார் அளித்துள்ளார். மேலும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் தபால் வாக்குகளில் முறைகேடுகள் பட்டதாக திமுக அமைப்புச் செயலாளர் புகார் அளித்துள்ளதாகவும் தகவல். மேலும் முறைகேடு தொடர்பாக ஏற்கனவே குமரி திமுக வேட்பாளர் ஆஸ்டின் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகள் கன்னியாகுமரி தொகுதியில் மக்களவை இடை தேர்தல் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web