பணிக்காலத்தின் கடைசி நாளில் அலுவலக அறையில் உறங்கிய ஐபிஎஸ் அதிகாரி!!

கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது பணிக்காலத்தின் கடைசிநாளான நேற்று அலுவலகத்திலேயே உறங்கிய சம்பவம் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. 1985 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பணியினைத் துவக்கிய ஜாகோப் தாமஸ், கேரள மக்களுக்குக் கிடைத்த ஒரு வரம் என்றே சொல்லலாம். தமிழகத்தில் மிகவும் நேர்மையான சகாயம் ஐஏஎஸ் அவர்களைப்போல், நேர்மையான முறையில் பணியாற்றிவர் ஜாகோப் தாமஸ் ஐபிஎஸ். அவர் ஐபிஎஸ் பதிவியில் இருந்தபோது, கேரள மாநிலத்தின் அரசியல்வாதிகள் பலரின் வழக்குகளையும் நோண்டி எடுத்து அனைவரையும் திணற விட்டார்.
 
பணிக்காலத்தின் கடைசி நாளில் அலுவலக அறையில் உறங்கிய ஐபிஎஸ் அதிகாரி!!

கேரளாவில் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் தனது பணிக்காலத்தின் கடைசிநாளான நேற்று அலுவலகத்திலேயே உறங்கிய சம்பவம் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

1985 ஆம் ஆண்டு ஐபிஎஸ் பணியினைத் துவக்கிய ஜாகோப் தாமஸ், கேரள மக்களுக்குக் கிடைத்த ஒரு வரம் என்றே சொல்லலாம். தமிழகத்தில் மிகவும் நேர்மையான சகாயம் ஐஏஎஸ் அவர்களைப்போல், நேர்மையான முறையில் பணியாற்றிவர் ஜாகோப் தாமஸ் ஐபிஎஸ்.

அவர் ஐபிஎஸ் பதிவியில் இருந்தபோது, கேரள மாநிலத்தின் அரசியல்வாதிகள் பலரின் வழக்குகளையும் நோண்டி எடுத்து அனைவரையும் திணற விட்டார். அதிலும் படத்தில் வருவது முதல்வர் உம்மன் சாண்டியின் பார் ஊழல் வழக்கையினை தோண்டி அதிரடியாக காட்டிய விஷயத்தினை யாரும் இன்றுவரை மறந்திருக்க மாட்டார்கள்.

பணிக்காலத்தின் கடைசி நாளில் அலுவலக அறையில் உறங்கிய ஐபிஎஸ் அதிகாரி!!

இவர் பதவியில் இருந்த 35 ஆண்டுகளில் இவருக்கு கிடைத்த பணி இடமாற்றமோ கணக்கில் இல்லாதது என்றே கூற வேண்டும், கடந்த 5 ஆண்டுகளாக கேரள அரசின் மெட்டல் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குனராகப் பதவி வகித்து வந்தார் ஜாகோப் தாமஸ்.

நேற்று ஓய்வுபெற்ற இவர் பேஸ்புக்கில், ‘‘பணிக்காலத்தின் கடைசி நாள் இன்று, எனது அலுவலக அறையிலேயே உறங்குகிறேன். அடுத்து பரசுராமரின் கோடரியால், வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்தைத் துவங்கவுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் கேரள ஊடகங்களில் பரபரப்பானதைத் தொடர்ந்து, பொதுமக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் அவருக்கு வாழ்த்துகளையும், அவர் ஆற்றிய சேவைக்கு நன்றியினையும் கூறி வருகின்றனர்.

From around the web