கன்னியாகுமரியில் ஆட்டம்போடும் கண்ணுக்குத் தெரியாத கிருமி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதிதாக 233 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது!
 
கன்னியாகுமரியில் ஆட்டம்போடும் கண்ணுக்குத் தெரியாத கிருமி!

தமிழகத்தில் முக்கடல் சந்திக்கும் பூமியாக காணப்படுகிறது கன்னியாகுமரி மாவட்டம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய பெருங்கடல் வங்காள விரிகுடா அரபிக் கடல் மூன்றும் சங்கமிக்கும் இடமாக உள்ளது. மேலும் இங்கு உள்ள திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் மண்டபம் தமிழக மக்கள் மட்டுமின்றி உலக மக்களிடையே பார்வையைக் கவர்ந்துள்ளது என்றே கூறலாம். மேலும் கன்னியாகுமரி ஆனது பல்வேறு சுற்றுலாத் தலங்களையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.corona

மேலும் இங்கு காணப்படும் தக்கலை நாகர்கோவில் போன்ற பகுதிகளில் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுவதால் இப்பகுதிக்கு தமிழக மக்கள் சுற்றுலா மேற்கொள்வது மிகவும் இதமாக காணப்படும். இத்தகைய சிறப்பு பெற்ற கன்யாகுமரி மாவட்டத்தில் சில தினங்களாக கண்ணுக்குத் தெரியாத ஆட்கொல்லி நோயான கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மேலும் அது மட்டுமின்றி ஒட்டு மொத்த இந்திய அளவிலும் இந்நோயின் தாக்கம் மீண்டும் எழுந்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.

ஆயினும் இந்த கொரோனா நோயானது கடந்த ஆண்டில் இந்தியாவில் கட்டுப்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சில வாரங்களாக இந்நோயின் தாக்கம் இரண்டாவது அலையாக எழுந்து மக்களுக்கு இன்னல்களை கொடுக்கிறது. கன்னியாகுமரியில் கடந்த 24 மணி நேரத்தில் 233 பேருக்கு இந்நோயானது புதிதாக கண்டறியப் பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கன்னியாகுமரியில் 20 ஆயிரத்து 235 ஆக அதிகரித்துள்ளது.மேலும் இதுவரை 372 பேர் சிகிச்சை பலனின்றி  பலியானதாக கூறப்படுகிறது. இதனால் கண்ணுக்கு தெரியாத கிருமியின் ஆட்டம் கன்னியாகுமரியில் காணப்படுகிறது.

From around the web