கவிழ்ந்தது எண்ணெய் லாரி! குடம் குடமாக மக்கள் பிடித்தனர் எண்ணெயை!

உளுந்தூர்பேட்டை அருகே எண்ணெய் டேங்கர் லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி சம்பவம் நிகழ்ந்துள்ளது!
 
கவிழ்ந்தது எண்ணெய் லாரி! குடம் குடமாக மக்கள் பிடித்தனர் எண்ணெயை!

முன்னொரு காலத்தில் நமக்கு வெளியூர் பயணங்களுக்கு செல்வதற்குக் கூட வாகனம் இல்லாமல் நடந்து சென்ற காலம் உண்டு. காலம் மாற மாற அறிவியல் வளர்ச்சி அதிகமாக உள்ளது. இப்போது நாம் பக்கத்து தெருவுக்கு செல்லும் போது கூட வாகனம் இன்றி செல்ல முடியாத அளவிற்கு அறிவியலின் வளர்ச்சியும் உற்பத்தியும் அதிகமாக காணப்படுகிறது.இத்தகைய உற்பத்தி அதிகரிப்பு பயனை அளிப்பது மட்டுமின்றி பலருக்கு அ வையும் ஒரு சில நேரங்களில் பெரும் விபத்துக்கள் உண்டாகின்றன.lorry

மேலும் ஒரு சில விபத்துக்களை உயிரிழப்புகளும் ஏற்படுவது சோகத்தை உண்டாக்கின்றன. தமிழகத்தில் நாளொன்றுக்கு விபத்து இல்லாமல் இருப்பது இல்லை என்றும் அளவிற்கு தமிழகம் தற்போது உள்ளது. இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அருகே விபத்து ஒன்று நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த விபத்தில் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்ததாக கூறப்படுகிறது. காரணம் என்னவெனில் இந்த விபத்து எண்ணெய் டேங்கர் லாரி கவிழ்ந்ததால் மக்கள் எண்ணெய்களை பிடித்து சென்றதாக கூறப்படுகிறது.

அதன்படி உளுந்தூர்பேட்டை அருகே பேக்கரி எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்தில் உள்ளது. மேலும் மேட்டத்தூர் கிராமத்தில் சாலையில் குறுகிய பாலத்தின் தடுப்பு மீது மோதி லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. மேலும் லாரியில் இருந்த 10 லட்சம் மதிப்பிலான 15 ஆயிரம் லிட்டர் ஆயில் சாலையில் ஆறாக ஓடியது. இதனால் மேட்டத்தூர் சுற்றுப்பகுதி கிராம மக்கள் குடம் கேன்களில் பேக்கரி ஆயிலை எடுத்து சென்றனர்.

From around the web