மிரட்டும் நிபா வைரஸ்: பொதுமக்கள் அதிர்ச்சி!

 
niba virus

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் ஒரு பக்கம் மிரட்டி வரும் நிலையில் நிபா வைரஸ் இன்னொரு பக்கம் மிரட்டி வருவதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் 

கேரள மாநிலத்தில் சமீபத்தில் 12 வயது சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பலியான 12 வயது சிறுவனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த எட்டு பேரை பரிசோதனை செய்ததில் அவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் ஐந்து பேர்களின் பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை என்றும் கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் 

மேலும் மத்திய அரசின் சிறப்பு மருத்துவ குழு கேரள மாநிலத்திற்கு சென்று தற்போது ஆய்வு நடத்தி வருவதாகவும் சிறுவன் சாப்பிட்டதாக கூறப்படும் பழங்களின் மாதிரிகளை சேகரித்து அதிலிருந்து தான் நிபா வைரஸ் பரவியதா? என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது 

மேலும் சிறுவனின் தாயார் உள்பட 6 பேருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒரு பக்கம் கொரோனாவைரஸ் இன்னொரு பக்கம் நிபா வைரஸ் என கேரள மாநில மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு பணிகளை தமிழக சுகாதாரத் துறை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web