2019 பிப்ரவரியில் தாக்கல் ஆன இடைக்கால பட்ஜெட் !

மத்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி இல்லாத காரணத்தினால், இடைக்கால நிதி அமைச்சராக பதவியில் இருந்த பியூஸ் கோயல்தான் இந்த 2019- 2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். இதன் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள்: சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். இது மூன்று தவனைகளாக, வழங்கப்படும். நாட்டில் உள்ள 5 கோடி
 
2019 பிப்ரவரியில் தாக்கல் ஆன இடைக்கால பட்ஜெட் !

மத்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதிஅமைச்சர் அருண் ஜெட்லி இல்லாத காரணத்தினால், இடைக்கால நிதி அமைச்சராக பதவியில் இருந்த பியூஸ் கோயல்தான் இந்த 2019- 2020 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

2019 பிப்ரவரியில் தாக்கல் ஆன இடைக்கால பட்ஜெட் !

இதன் சில குறிப்பிடத்தக்க அம்சங்கள்:

  1. சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும். இது மூன்று தவனைகளாக, வழங்கப்படும்.
  2. நாட்டில் உள்ள 5 கோடி  மீனவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு மீன்வளத்துறை அமைக்கப்படும்
  3. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இந்திய அரசின் பங்களிப்பு சதவீதம் 4% உயர்ந்தது. அதன்படி 14% ஆக மாறியுள்ளது.
  4. அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாத ஓய்வு ஊதியமாக ரூ.3000 வழங்கப்படும்.
  5. 22 ஆவது எய்ம்ஸ் மருத்துவமனை ஹரியானாவில் அமைக்கப்பட வழிவகை செய்யப்படும்.
  6.  முத்ரா திட்டத்தின் மூலம் பெண்களுக்கு 7.23 லட்சம் கோடி கடன் வழங்கப்படவுள்ளது. 
  7. வங்கி / போஸ்ட் ஆபீஸ் போன்றவற்றில் வரிச்சலுகை பெறுவதற்கான உச்சவரம்பு சேமிப்பின் அளவு ரூ.10,000 முதல் ரூ.40,000 வரை மட்டுமே இருக்க ஆணை பிறப்பித்தல்

From around the web