ராஜீவ் ரஞ்சன் தலைமையில், தலைமைச் செயலகத்தில் தீவிர ஆலோசனை!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தீவிர ஆலோசனை!
 
ராஜீவ் ரஞ்சன் தலைமையில், தலைமைச் செயலகத்தில் தீவிர ஆலோசனை!

மக்களிடையே சில தினங்களாக அதிகமாக பேசப்படும் ஒரு வாய்ச் சொல்லாக மாறியது கொரோனா. கொரோனா வைரஸ் மக்களின் கண்ணுக்கு தெரியாமல் மக்களிடம் சென்று மனிதர்களை இறுதியில் மரணத்திற்கு கொண்டு செல்கிறது. இந்த கொரோனா  நோயானது சீனாவில் முதலில் கண்டறியப் பட்டதாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தில் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்நோயானது பரவத் தொடங்கி கடந்த ஆண்டின் இறுதிக்குள் இந்நோயானது தமிழகத்தில் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

corona

எனினும் சில தினங்களாக இந்நோயின் தாக்கம் ஆனது தமிழகத்தில் மீண்டும் அதிகரித்துள்ளது மிகுந்த வேதனை அளிக்கிறது.மேலும் இந்நோய்க்கு எதிராக தமிழக அரசின் சார்பில் கட்டுப்பாட்டு விதிகள் விதித்துள்ளன. மேலும் சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டன. மேலும் தற்போது தமிழகத்தில் தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் உள்ளார். அவர் தற்போது கொரோனா நடவடிக்கைகள் குறித்து தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் அவர் தலைமைச் செயலகத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய 11 ஒருங்கிணைப்பு  குழுவுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் கொரோனா கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை, எடுக்கவேண்டிய உள்ளிட்டவை பற்றியும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.மேலும் தமிழகத்தில் தற்போது முதல்வர் ஆட்சி இல்லை என்பதும் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி எனப்படும் என்றும் கூறப்படுகிறது.

From around the web