தஞ்சையில் உள்ள எட்டு தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளுக்கும் 3438 வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3755 விவிபேட் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன!
 

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மணி நேரங்களே உள்ள நிலையில் அதற்கான வேலைப்பாடுகள் தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு. அவர் சில மணி நேரங்களுக்கு முன்னர் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் ஏற்பாடுகள் குறித்த தகவல்களை வெளியிட்டார்.

vote

தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பப்படுகிறது. அதன்படி தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்றழைக்கப்படும் தஞ்சாவூர் பகுதியிலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும்  விவிபேட் இயந்திரங்களை அனுப்பும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தஞ்சாவூரில் மொத்தம் எட்டு தொகுதிகள் உள்ளன.

இது 8 தொகுதிகளில் 2886 மையங்கள் உள்ளன. இந்த 2886 மையங்களில் 3438 வாக்குப்பதிவு இயந்திரங்களும் 3755 விவிபேட் பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளன மேலும் ஒரு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் இது மேலும் தஞ்சையில் 102 வாக்குச்சாவடிகளில் பதற்றமான காணப்படுதல் அங்கு வெப் கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இதற்காக 13,000 அலுவலர்களும் 5192 காவலர்களும் தேர்தல் பணிக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

From around the web