அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரச்சாரத்தில் தீவிரம்!

ஆவடி மாதாவரம் பொன்னேரி கும்மிடிப்பூண்டி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்!
 
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் பிரச்சாரத்தில் தீவிரம்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில்  பல கட்சி பல கட்சிகளுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கின்றன. தமிழகத்தில் மிகவும் வலிமையான கட்சியாக உள்ள அதிமுக தன்னுடன் கூட்டணியாக பாஜக, பாமக கூட்டணி வைத்து  தேர்தலை சந்திக்க உள்ளன.  தமிழகத்தின் மிகவும் வலிமையான எதிர்க் கட்சியாக உள்ள திமுக கட்சியானது தன்னுடன் கூட்டணியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, காங்கிரஸ் போன்ற கட்சிகளை வைத்துதேர்தலை சந்திக்க உள்ளன.

admk

சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் கொளத்தூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார். அதற்கான வேட்பு மனுவையும் தாக்கல் செய்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறார். அதிமுக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி  அறிவிக்கப்பட்டார். அவர் மீண்டும் எடப்பாடி தொகுதியின் தனது வேட்பு மனு தாக்கல் செய்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

மேலும் அவர் கூட்டணி மற்றும்  கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறார். அதன்படி அவர் ஆவடி, மாதாவரம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி போன்ற வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் தீவிரம் காட்டினார்.

அவர் கூறினார் தமிழகத்தில் உள்ள 14000 ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டு உள்ளதாக அவர் கூறினார். மேலும் அவர் மூன்று லட்சம் கோடி முதலீட்டில் 304 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.படித்த இளைஞர்களின் நேரடியாக ஐந்து லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும் எனவும் அவர் பிரச்சாரத்தில் கூறினார் .மேலும் தமிழகம் முழுவதும்  சென்று  தனது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.

From around the web