நீலகிரியில் புது கட்டுப்பாடு, "குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு"அறிவித்தார் இன்னசென்ட் திவ்யா!

நீலகிரியில் அரசு ஊழியர்கள் வெளிமாவட்டங்களுக்கு செல்ல கூடாது என்று அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா!
 
நீலகிரியில் புது கட்டுப்பாடு, "குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு"அறிவித்தார் இன்னசென்ட் திவ்யா!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர்கள் உள்ளன. மேலும் அந்த மாவட்ட ஆட்சியர்கள் தங்களது மாவட்டங்களில் தேவைக்கேற்ப உத்தரவுகளையும் கட்டுப்பாடுகளையும் தெரிவித்து வருகின்றனர். மேலும் சில தினங்களாக மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். இத்தகைய உத்தரவுகள் சில தினங்களாக பிறப்பிக்கப்படுவதற்கு காரணம் என்னவெனில் தற்போது தமிழகத்தில் ஆட்கொல்லி நோயின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.nilgiri

தமிழக மக்கள் மத்தியில் ஆட்கொல்லி நோய் என்று அழைக்கப்படுவது கொரோனா.கொரோனா நோய்க்கு எதிராக தமிழ்நாட்டு மக்களே மிகவும் போராடி வருகின்றனர் எனினும் இன்னும் நோயானது கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகமாகவே காணப்படுகிறது. மேலும் பல மாவட்ட ஆட்சியர் அவர்களின் மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாட்டு விதிகளை  விதித்து வருகின்றனர். தமிழகத்தில் காடுகள் அதிகம் காணப்படும் மாவட்டமாக காணப்படுவதே நீலகிரி மாவட்டம்.

இந்த மாவட்டத்தில் தற்போது மாவட்ட ஆட்சியராக உள்ளார் இன்னசென்ட் திவ்யா. அவர் தற்போது நீலகிரியில் அரசு ஊழியர்களுக்கு கட்டுப்பாட்டு விதிகளை விதித்துள்ளார். அதன்படி நீலகிரி மாவட்டத்தில் பணிபுரியும் அரசு அதிகாரிகள் ஊழியர்கள் தேவையின்றி வெளிமாவட்டங்களுக்கு செல்ல கூடாது என்று கூறியுள்ளார். மேலும் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அவர் தற்போதைய நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது மேலும் நீலகிரி மாவட்டம் தமிழகத்தில் அதிகம் கொரோனாதடுப்பூசி போட்ட மாவட்டங்களில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web