10,11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து செங்கோட்டையன் கூறிய தகவல்!

 

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு பின்னர் சமீபத்தில்தான் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன என்பதும் பள்ளிகள் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடங்கள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே 

இருப்பினும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை எப்போது பாடம் தொடங்கும் என்பது இன்னும் கேள்விக்குறியாகவே இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் பனிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு அட்டவணை வெளியானது என்பதும் இதனை அடுத்து மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 

exam

அதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மிக விரைவில் முடிவு செய்வார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அனேகமாக ஏப்ரல் மாத இறுதியிலேயே பத்தாம் வகுப்பு தேர்தல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் கூறின

மேலும் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளதால், இந்த ஆண்டு பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வு நடப்பது சந்தேகம் என்றும் கூறப்பட்டு வருகிறது

From around the web