ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பற்றிய  தகவல்கள்! இந்தியா அனுமதி!

ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி போட்டுக் கொள்ள இந்திய அரசானது அனுமதித்துள்ளது!
 
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பற்றிய தகவல்கள்! இந்தியா அனுமதி!

மக்கள் மத்தியில் உயிரை வாங்கும் நோயாக தற்போது கண்ணுக்கு தெரியாமல் வந்துள்ளது கொரோனா .இந்த கொரோனா நோயானது இந்தியாவின் நட்பு நாடான சீனாவில் உள்ள ஒருவருக்கு முதன்முதலாக கண்டறியப் பட்டதாக தகவல் வெளியானதை தொடர்ந்து சீனாவில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் இந்த நோயின் தாக்கம்  தலைவிரித்தாடியது.இந்த நோயானது 2019 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. அதன் பின்னர் உலக நாடுகள் அனைத்திலும் பரிசோதித்து பார்த்தபோது உலக நாடுகள் அனைத்திலும் இந்த நோயின் தாக்கம் இருந்தது தெரியவந்தது.

covid 19

இதனால் உலக நாடுகள் அனைத்தும் மிகுந்த வருத்தத்தில் இருந்தனர். மேலும் இந்தியாவிலும் 2020ஆம் ஆண்டில் கொரோனா தொடங்கியது. ஆனால் இறுதியில் இந்தியாவில் நோய் குறைய தொடங்கியது.இந்நிலையில் சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. மேலும் இந்திய அரசானது தற்போதுவரை கோவிஷீல்டு கோவாக்சின் தடுப்பூசிகள் பயன்பாட்டில் வைத்துள்ளனர். தற்போது ரஷ்யாவிடமிருந்து  ஸ்புட்னிக் வி  என்ற தடுப்பூசி பெற்று மூன்றாவது முறையும் நடைமுறைக்கு அனுமதித்துள்ளது.

அதன்படி இந்த ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஆனது ரஷ்யாவில் கண்டறியப்பட்டது. மேலும் உலக நாடுகள் அனைத்திற்கும்  இந்த ஸ்புட்னிக் வி  தடுப்பூசியினை ஏற்றுமதி செய்கிறது. அதன்படி இந்தியாவானது ரஷ்யாவிடம் இருந்து பெற்ற நாடுகளில் வரிசையில் அறுபதாவது நாடாக உள்ளது. மேலும் குழப்பத்தில் 91.6% செயல்திறன் கொண்டது. இந்த ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி தற்போது இந்தியாவில் நடைமுறைக்கு வர உள்ளது. மேலும் இந்த ஸ்புட்னிக் வி   இருபத்தொரு நாள் இடைவெளியில் இரண்டு தவணைகளாக செலுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 21 நாள் இடைவெளியில் ஸ்புட்னிக் வி  தடுப்பு ஊசி செலுத்தப்படும் வேண்டும் எனவும் மத்திய அரசு கூறியுள்ளது.

From around the web