அத்தி வரதர் தரிசனம் ரத்து

காஞ்சிபுரத்திலிருக்கும் வரதராஜப்பெருமாள் கோவிலின் திருக்குளமான அனந்த சரஸ் நீரில் மூழ்கி இருக்கும் அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளியில் வந்து 48 நாட்களுக்கு ஒருமுறை கட்சியளிப்பது வழக்கம். முதல் 24 நான்கு நாட்கள் சயனகோலத்திலும், பின் 24 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சியளிப்பது வழக்கம். அதன்படி ஜூலை 23ந்தேதி வரை சயனகோலத்தில் காட்சியளிப்பது முடிந்து 24 லிருந்து நின்ற கோலத்தில் காட்சியளித்திருக்க வேண்டும். ஆனால், அத்திவரதர் சிலாரூபத்தினை நிற்க வைப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்ததால்,
 
அத்தி வரதர் தரிசனம் ரத்து

காஞ்சிபுரத்திலிருக்கும் வரதராஜப்பெருமாள் கோவிலின் திருக்குளமான அனந்த சரஸ் நீரில் மூழ்கி இருக்கும் அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீரிலிருந்து வெளியில் வந்து 48 நாட்களுக்கு ஒருமுறை கட்சியளிப்பது வழக்கம். முதல் 24 நான்கு நாட்கள் சயனகோலத்திலும், பின் 24 நாட்கள் நின்ற கோலத்திலும் காட்சியளிப்பது வழக்கம். அதன்படி ஜூலை 23ந்தேதி வரை சயனகோலத்தில் காட்சியளிப்பது முடிந்து 24 லிருந்து நின்ற கோலத்தில் காட்சியளித்திருக்க வேண்டும்.

ஆனால், அத்திவரதர் சிலாரூபத்தினை நிற்க வைப்பதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்ததால், அவை கலையப்பட்டு அதாவது 1/8/2019 வியாழக்கிழமையிலிருந்து அத்திவரதர் நின்ற கோலத்தில் காட்சியளிப்பார் என கோவில் நிர்வாகத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், 31/7/2019 புதன்கிழமையான இன்று பகல் 12 மணிக்கு கிழக்கு ராஜகோபுரத்தில் பொது தரிசன சேவை நிறுத்தப்படும். கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்ட பக்தர்கள் மாலை 5 மணிக்குள் தரிசனம் முடித்து வெளியேற்றப்படுவர்.

From around the web