ஐநாவின் பாராட்டினைப் பெற்ற இந்தியாவின் சுற்றுச் சூழல் தினம்!!

2019 ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுச் சூழல் தினமானது ஜூன் 5 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாட்டப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் இந்திய அரசாங்கத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி போன்றவை நடத்தப்பட்டது. மத்திய சுற்றுச் சூழல்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தலைமையில் புது டெல்லியில் சுற்றுசுழல் தினம் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்தவகையில் சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு ஜுன் 5 ஆம்
 
ஐநாவின் பாராட்டினைப் பெற்ற இந்தியாவின் சுற்றுச் சூழல் தினம்!!

2019 ஆம் ஆண்டுக்கான உலக சுற்றுச் சூழல் தினமானது ஜூன் 5 ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாட்டப்பட்டது. பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் என அனைத்து இடங்களிலும் இந்திய அரசாங்கத்தின் சார்பில் விழிப்புணர்வு பேரணி போன்றவை நடத்தப்பட்டது.

மத்திய சுற்றுச் சூழல்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் தலைமையில் புது டெல்லியில் சுற்றுசுழல் தினம் பிரமாண்டமாக நடைபெற்றது.

ஐநாவின் பாராட்டினைப் பெற்ற இந்தியாவின் சுற்றுச் சூழல் தினம்!!

அந்தவகையில் சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு ஜுன் 5 ஆம் தேதி பிளாஸ்டிக்கினை ஒழிப்போம் என்பதை குறிக்கோளாகக் கொண்டு இந்த ஆண்டு கொண்டாடப்பட்டது.

அதன்படி மோடி அவர்களின் ஆலோசனையின்படி இந்தியா முழுவதும் கடற்கரையினை தூய்மையாக்குதல், பொது இடங்களில் தூய்மையினைக் கடைபிடித்தல், பிளாஸ்டிக்கினால் சுற்றுச்சூழல் மாசு போன்றவை குறித்த பல நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை சுற்றுச்சூழல் துறை, சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் இணைந்து சென்னை மெரீனாவில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்தியது.

பிளாஸ்டிக் ஒழிப்பின் முதல் அடியினை இந்தநாளில் எடுத்து வைக்க, இது மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணம் என்று கூறப்பட்டது.

பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலுமாக ஒழித்துவிடுவோம் என்று எடுத்த உறுதிமொழியினை ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச் சூழல் பிரிவு பாராட்டியது.

இதனை பிறநாடுகளும் செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தது.

From around the web