இந்தியாவின் ஆணழகன் கொரோனாவுக்கு பலி!

 
இந்தியாவின் ஆணழகன் கொரோனாவுக்கு பலி!

இந்தியாவில் கொரோனா வைரஸ் தினந்தோறும் லட்சக்கணக்கில் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். மேலும் ஒரு சில பிரபலங்களும் கொரோனா வைரஸ்க்கு பலியாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களில் இயக்குனர் தாமிரா, இயக்குநர் கேவி ஆனந்த், நடிகர் விவேக் உள்பட பல பிரபலங்கள் தமிழ் திரையுலகில் கொரோனாவுக்கு பலியானார்கள் என்பது தெரிந்ததே 

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி இந்தியாவில் ஆணழகன் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் ஆணழகன் பட்டம் வென்றார் ஜெகதீஷ் லாட் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்

aanalagan coroan

கடந்த 4 நாட்களாக அவர் குஜராத் மாநிலத்தில் உள்ள வடோதரா என்ற நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவரை காப்பாற்ற மருத்துவர்கள் போராடியதாகவும் தெரிகிறது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி சற்று முன்னர் உயிரிழந்தார்.

இந்தியாவின் ஆணழகன் பட்டம் வென்று கொரோனாவுக்கு பலியான ஜெகதீஷ் லாட் அவர்களின் வயது வெறும் 34 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. ஆணழகன் பட்டம் வெல்லும் அளவுக்கு உடலை கட்டுக்கோப்பாக வைத்து இருந்த ஜெகதீஷ் அவர்களையும் கொரோனா வைரஸ் பலிகொண்டுவிட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

From around the web